Kurusinil Thongiye Kuruthiyum – குருசினில் தொங்கியே குருதியும்

Tamil Christian Songs Lyrics

Artist: D.G.S. Dhinakaran
Album: Easter

Kurusinil Thongiye Kuruthiyum Lyrics In Tamil

குருசினில் தொங்கியே குருதியும் வடியக்
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய்க் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க – யூத
பாதகர்கள் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! – தேவ
சுந்தர மைந்தனுயிர் விடு காட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும்
ஜலமும் திறந்தூற்றோடுது பார்

5. எருசலேமாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
ஏற்றகோல மிதோ

Kurusinil Thongiye Kuruthiyum Lyrics In English

Kuruchinil Thongkiyae Kuruthiyum Vatiyak
Kolkathaa Malaithanilae – Nam
Kuruvaechu Chuvaami Kotunh Thuyar Paavi
Kollaayk Kan Kontu

1. Chirachinil Mulmuti Uruththida, Arainthae
Chiluvaiyil Chaerththaiyoa! – Thiiyar
Thirukkarang Kaalkalil Aanikalatiththaar
Chaenaiththiral Chuuzha

2. Paathakar Natuvil Paaviyinaechan
Paathakanpoal Thongka – Yutha
Paathakarkal Parikaachangkal Pannip
Patuththiya Kotumaithanai

3. Chanthira Chuuriya Chakala Vaan Chaenaikal
Chakiyaamal Nhaanuthaiyoa! – Thaeva
Chunthara Mainthanuyir Vitu Kaatchiyaal
Thutikkaa Negnchuntoa

4. Iittiyaal Chaevakan Ettiyae Kuththa
Iraivan Vilaavathilae – Avar
Thiittiya Thiitchaik Kuruthiyum
Jalamum Thiranthuurroatuthu Paar

5. Eruchalaemaathae Maruki Niiyazhuthu
Aengkip Pulampalaiyoa – Nin
Eruchalaiyathipan Ila Manavaalan
Aerrakoala Mithoa

Watch Online

Kurusinil Thongiye Kuruthiyum MP3 Song

Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Kalvary Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =