Santhosame Santhosame Yesuvin – சந்தோசமே சந்தோசமே இயேசுவின்

Tamil Christian Songs Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 6

Santhosame Santhosame Yesuvin Lyrics In Tamil

சந்தோசமே சந்தோசமே
சந்தோசமே சந்தோசமே
இயேசுவின்தானே
இங்குபோல சந்தோசமே
எங்குமில்லையே

1. இயேசுவோடு பேசுவதே நமக்கு சந்தோஷம்
இயேசுவோடு இருப்பதுவே நமக்கு சந்தோஷம்
அவரும் நம்மில் நாமும் அவரில் இருந்துவிட்டாலே
வாழ்க்கை முழுதும் சந்தோசமே இன்பமயமே

2. பரிசுத்தமாய் வாழ்வதுமே நமக்கு சந்தோஷம்
பாவமில்லா வாழ்க்கைய நமக்கு சந்தோஷம்
இயேசுவுக்கு பிரியமாக வாழ்வது தானே
உண்மையான நிலையான பெரிய சந்தோஷம்

3. இயேசுவையே துதிப்பதுவே நமக்கு சந்தோசம்
தேவனையே உயர்த்துவதே நமக்கு சந்தோஷம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதே
பரலோக தெய்வீக இன்பசந்தோஷம்

4. வேதத்தையே ருசிப்பதுவே நமக்கு சந்தோஷம்
இராப்பகலாய் தியானிப்பதே நமக்கு சந்தோஷம் – அது
சொன்னபடி நாம் என்றும் வாழ்ந்துவிட்டாலே
வாழ்க்கையிலே துன்பமில்லை சந்தோசந்தானே

5. இயேசுவின் இரத்ததாலே கழுவப்பட்டோமே
அழியாத இரட்சிப்பை பெற்றுக்கொண்டோம்
உலகில் ஏதும் இருந்தாலும் இல்லா விட்டாலும்
பரலோகில் இடமுண்டு போதும் போதுமே

6. உலகம் தரும் சந்தோசமே எல்லாம் மாயையே
அதினாலே வேதனையும் துன்பமும் தானே
யாராலும் தந்திடாத என்றும் அழியா
சந்தோஷம் சமாதானம் இயேசு தந்தாரே

Santhosame Santhosame Yesuvin MP3 Song

Santhosame Santhosame Yesuvin Lyrics In English

Santhosame Santhosame
Yesuvin Thannae
Ingkupoala Chanthoachamae
Engkumillaiyae

1. Iyaechuvoatu Paechuvathae Namakku Santhosam
Iyaechuvoatu Iruppathuvae Namakku Santhosam
Avarum Nammil Naamum Avaril Irunthuvitdaalae
Vaazhkkai Muzhuthum Santhosame Inpamayamae

2. Parichuththamaay Vaazhvathumae Namakku Santhosame
Paavamillaa Vaazhkkaiya Namakku Santhosame
Iyaechuvukku Piriyamaaka Vaazhvathu Thaanae
Unmaiyaana Nilaiyaana Periya Santhosame 

3. Iyaechuvaiyae Thuthippathuvae Namakku Santhosam
Thaevanaiyae Uyarththuvathae Namakku Santhosam
Aaviyoatum Unmaiyoatum Aaraathippathae
Paraloaka Theyviika Inpachanhthoasham

4. Vaethaththaiyae Ruchippathuvae Namakku Santhosam
Iraappakalaay Thiyaanippathae Namakku Santhosam – Athu
Chonnapati Naam Enrum Vaazhnthuvitdaalae
Vaazhkkaiyilae Thunpamillai Santhosam Thannae

5. Iyaechuvin Iraththathaalae Kazhuvappattoamae
Azhiyaatha Iratchippai Perrukkontoam
Ulakil Aethum Irunthaalum Illaa Vitdaalum
Paraloakil Idamuntu Poathum Poathumae

6. Ulakam Tharum Chanthoachamae Ellaam Maayaiyae
Athinaalae Vaethanaiyum Thunpamum Thaanae
Yaaraalum Thanthidaatha Enrum Azhiyaa
Santhosame Chamaathaanam Iyaechu Thanthaarae

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =